தமிழ் සිංහල English
Breaking News

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க மீண்டும் கைது!

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி கஹவத்தை பொலிஸ் பிரிவில், முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட குழுவினரால் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சில விடயங்களை மறைக்க முற்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று பொலிஸ் விசே விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் லலித் ஜெயசிங்கவை பெல்மடுல்லை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, அவரைப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரைத் தப்பிக்க விட்ட குற்றச்சாட்டில், லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts