தமிழ் සිංහල English
Breaking News

இளம் காதல் ஜோடிகளை பிடித்து சென்ற பொலிஸார்…!!

அனுராதபுரம் மாநகர சபையினால் பாரமரிக்கப்படும் ரிவர் பார்க் மற்றும் நேச்சர் பார்க் பூங்காக்களில் விசேட தேடுதலை நடத்திய பொலிஸார், 304 இளம் காதல் ஜோடிகளை பிடித்து அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவர்கள், அனைவரும் பகுதி நேர வகுப்பு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, அனுராதபுரம் நகருக்கு வந்த பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இரண்டு பேருந்துகளில் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காதல் ஜோடியினர் எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 45 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பூங்காக்கள் ஜயஸ்ரீ மஹாபோதி புனித வெள்ளரசு மரம் அமைந்துள்ள வீதிக்கு எதிரில் அமைந்துள்ளன.

வழிபாட்டு தலத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இப்படியான பூங்காக்கள் இருக்கக் கூடாது என அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ மஹாநாம, மாநகர ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்

Share this post:

Recent Posts